இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கை வருகை தரவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் கிளப் உறுதிமொழிகளை வழங்கியிருந்தாலும், IMF பிணை எடுப்புப் பொதியைப் பெறுவதற்கு இலங்கை இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து உத்தரவாதங்களைப் பெற வேண்டும்.
இந்த பின்னணியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் வருகை, ஏனைய அனைத்து கடன் வழங்குபவர்களுக்கும் இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் வழங்கும் அமைப்புகளுக்கும் ஒரு முக்கியமான செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.