அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளியால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தெற்கு அமெரிக்கா முழுவதும் 35க்கும் மேற்பட்ட சூறாவளிகளை தேசிய வானிலை சேவைகள் பதிவுசெய்துள்ளது. இது 30 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
புயல் காரணமாக நான்கு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்தடையை எதிர்கொண்டுள்ளனர்.
அலபாமா, ஜோர்ஜியா, டென்னசி மற்றும் கரோலினாஸில் 147,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வியாழன் மாலை வரை மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.
அலபாமாவில் பதிவான சூறாவளி இறப்புகள் அனைத்தும் மாநிலத்தின் மையத்தில் உள்ள மாண்ட்கோமெரி மற்றும் செல்மா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஆட்டோகா கவுண்டியில் நிகழ்ந்தன.
இதனைத்தொடர்ந்து, அலபாமா மற்றும் ஜோர்ஜியாவின் ஆளுநர்கள் ஒவ்வொருவரும் அவசரகால அறிவிப்புகளில் கையெழுத்திட்டுள்ளனர்.