பான் அட்டையை ஒற்றை வணிக அடையாள அட்டையாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வரவு செலவு திட்டத்தில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில மற்றும் மத்திய அரசுகள் அங்கீகரித்த குறைந்தது 20 வெவ்வேறு அடையாள அட்டைகள் உள்ளன.
இதில் நிரந்தர கணக்கு எண்ணை அனைத்து செயல்முறைகளுக்கும் பிரத்யேக தொழில் அடையாளமாக மாற்றுவதற்கான சட்டம் வரவு செலவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படலாம்.
ஒரு நபர் அல்லது நிறுவனம் தங்களது பான் அட்டை தற்போதுள்ள வேறு ஏதேனும் அடையாளங்களுடன் இணைக்க அனுமதிக்கும் விதியை இச்சட்டம் உள்ளடக்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
பான் அட்டை என்பது தனிநபர், தொழில் நிறுவனங்கள், கூட்டு நிறுவங்கள் என பல்வேறு பட்ட வருமான வரி செலுத்துபர்களுக்காக இந்திய அரசாங்கத்தின் வருமான வரித்துறையால் வருமானவரிச் சட்டப்பிரிவு 139ஏ இன் கீழ் வழங்கப்படுகிறது.