துருக்கி தனது நேட்டோ உறுப்பினர் முயற்சியை ஆதரிக்கும் என்று சுவீடன் எதிர்பார்க்கக்கூடாது என்று துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாக்ஹோம் போராட்டத்தில் குர்ஆன் நகல் எரிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவரது இந்த கருத்து வெளிவந்துள்ளது.
நமது நாட்டுத் தூதரகத்தின் முன் இத்தகைய அவப்பெயரை ஏற்படுத்தியவர்கள், தங்கள் விண்ணப்பம் தொடர்பாக இனி எங்களிடம் எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகிறது என அவர் கூறினார்.
டேனிஷ் கட்சியைச் சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல்வாதியால் நடத்தப்பட்ட சமீபத்திய எதிர்ப்பு, பேச்சு சுதந்திரத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய அவதூறு என்று எர்டோகன் கண்டனம் செய்தார். மேலும், துறவிகளை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்று எர்டோகன் கூறினார்.
எர்டோகனின் கருத்துகளுக்கு பதிலளித்த சுவீடன் வெளியுறவு அமைச்சர் டோபியாஸ் பில்ஸ்ட்ரோம், துருக்கிய தலைவர் கருத்து தெரிவிப்பதற்கு முன் என்ன சொன்னார் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
‘சுவீடனுக்கு பரந்த கருத்துச் சுதந்திரம் உள்ளது, ஆனால் சுவீடன் அரசாங்கமோ அல்லது நானோ வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை ஆதரிக்கிறோம் என்பதை இது குறிக்கவில்லை’ என்று சுவீடன் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு சுவீடன், ஃபின்லாந்துடன் சேர்ந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது, ஆனால் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் துருக்கி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். எனினும், சமீபத்திய எதிர்ப்புகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன.