ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஆதரவாக டாங்கிகளை அனுப்பிய மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அவர்களது அறிவிப்பின் பிரகாரம் அவை விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், தனது இரவு உரையில் மேற்கு நாடுகளை நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை அனுப்புமாறு வலியுறுத்தினார்.
அமெரிக்காவும் ஜேர்மனியும் ஆப்ராம்ஸ் மற்றும் சிறுத்தை டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக அறிவித்ததை அடுத்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் இந்த அறிவிப்பை அப்பட்டமான ஆத்திரமூட்டல் என்று கண்டித்துள்ள ரஷ்யா, வழங்கப்பட்ட அனைத்து டாங்கிகளும் அழிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
உக்ரைனுக்கு 31 எம்1 ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை அனுப்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை அறிவித்தார். ஜேர்மனி தனது 14 சிறுத்தை-2 டாங்கிகளை உக்ரைனிய போர்க்களத்திற்கு அனுப்புவதாக கூறிய சில மணிநேரங்களில் டாங்கிகளை வழங்குவதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது.