உக்ரைன் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிரான அதன் பொருளாதாரத் தடைகளை ஜப்பான் கடுமையாக்கியுள்ளது.
ஏற்றுமதி தடை பட்டியலில் ரஷ்யாவின் இராணுவத் திறனை கட்டுப்படுத்தும் பல பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ரஷ்ய அதிகாரிகள், நிறுவனங்களின் சொத்துக்களை ஜப்பான் முடக்கியது.
பெப்ரவரி 3ஆம் திகதி 3 முதல் ரஷ்யாவில் உள்ள 49 நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஜப்பான் தடை செய்யும்.
நீர் பீரங்கி, எரிவாயு ஆய்வு கருவிகள் மற்றும் குறைக்கடத்தி கருவிகள் முதல் தடுப்பூசிகள், எக்ஸ்ரே ஆய்வு கருவிகள், வெடிபொருட்கள் மற்றும் ரோபோக்கள் வரையிலான தயாரிப்புகள் இதில் அடங்கும் என்று ஜப்பானின் பொருளாதார வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜே.எஸ்.சி. இர்குட் கார்ப், தரையிலிருந்து வான் ஏவுகணை தயாரிக்கும் எம்.எம்.இசட் அவன்கார்ட், துணை பாதுகாப்பு அமைச்சர் மிகைல் மிஜின்ட்சேவ் மற்றும் நீதியமைச்சர் கான்ஸ்டான்டின் சூய்சென்கோ மற்றும் 14 ரஷ்யா சார்பு நபர்கள் உட்பட ரஷ்யாவில் உள்ள மூன்று நிறுவனங்கள் மற்றும் 22 தனிநபர்களின் சொத்துகளையும் ஜப்பான் முடக்கும்.
ரஷ்யா உக்ரைன் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 11பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜேர்மனியும் அமெரிக்காவும் ஒரு புதிய ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள உதவும் டாங்கிகளை வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு வந்துள்ளது.
இதுதொடர்பாக ஜப்பானின் பொருளாதார வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘உக்ரைனைச் சுற்றியுள்ள சூழ்நிலையின் வெளிச்சத்தில் மற்றும் அமைதியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு பங்களிக்க, ஜப்பான் மற்ற பெரிய நாடுகளுக்கு ஏற்ப ஏற்றுமதி தடைகளை அமுல்படுத்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.