கோட்டபாயவின் அரசாங்கம் இந்த நாட்டை அழிப்பதற்கு முன்னதாக முதலாவது விவசாயிகளைத்தான் அழித்தார்கள் என எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் வகையிலான கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை)மாலை கோவில்போரதீவில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்;த்தி தலைமையில் இந்த பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, மக்கள் அதிகமான அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை கேட்டு இருப்பார்கள் ஆனால் அப்படி அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அதிகமாக செயல்படுத்தப்பட்டு இருக்கின்றனவா என்று சிந்திக்கும் பொழுது இல்லை இல்லை என்று தான் கூற முடியும்.
எதிர்காலங்களில் வருவார்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவார்கள் நாம் சில வாக்குறுதிகளுக்கு அடிமையாக்கி விடுவோம்.
எமது கட்சியின் மூலம் வெற்றிபெறும் உறுப்பினர்கள் எதுவித மணல் பர்மிட் மற்றும் கொன்றக்ட் வேலைகளினால் தரகு பணம் பெறும் செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்.
விடமைப்பு கட்டுமான துறை அமைச்சராக இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான வீடுகளை இந்த மாவட்ட மக்களுக்கு கட்டிக் கொடுத்தோம், அதிகமான குறை வீடுகளை நிவர்த்தி செய்து கொடுத்தோம் ஆனால் அன்று ஜனாதிபதி தேர்தல் ஏற்பட்டதன் மாற்றம் காரணமாக எங்களது விடமைப்பு வேலை திட்டங்கள் சேவை திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டு விட்டன
இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாங்கள் ஒட்டுமொத்த சபைகளையும் கைப்பற்றி நாங்கள் தற்போது காணப்படக்கூடிய அரசுக்கு ஒரு செய்தியை கூற இருக்கின்றோம்.
அதன் மூலமாக இடைநிறுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்திகளும் அனைத்து வீட்டு திட்டங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் உயிர் பெரும் என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்த பட்டிருப்பு தொகுதியை எடுத்துக் கொண்டால் மூன்று உள்ளூராட்சி தொகுதிகள் காணப்படுகின்றன நிச்சயமாக அந்த மூன்று சபைகளை நாங்கள் வெற்றி பெற்றதன் பிற்பாடு உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரு திட்டத்தை கொண்டு வருகின்றோம் திட்டமானது எங்களுடைய அயல்நாடுகளில் காணப்படுகின்றன சபைகளைஅங்கு காணப்படக்கூடிய விருத்தி செய்வதற்கு நாங்கள் ஜெனரே தான் இருக்க வேண்டும் பிரதி அமைச்சர் ஆக தான் நீ இருக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை நிச்சயமாக எங்களிடத்தில் அழகான திட்டங்கள் இருக்கின்றது மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 12 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன எனவே இந்த ஊராட்சி மன்றங்களில் நாங்கள் மிக பெரிய ஒரு செயல்களை கொண்ட ஒரு பெரிய திணைக்களுடன் வெளிநாடுகளுக்கு சென்று அப்படியான வார்த்தைகளுடன் இந்த உள்ளூராட்சி மன்றங்களை தொடர்பு படுத்தி அவர்கள் உடைய இந்தப் பிரதேசத்தை உறுதி செய்து காண்பித்தியை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
நிச்சயமாக இந்த பிரதேசங்கள் ஆனது வெற்றி வாகை சூடும் பட்சத்தில் இந்த பிரதேசம் முழுவதுமாக நிச்சயமாக பொருளாதார உற்பத்தி மிக்க ஒரு ஊராட்சி செய்பவர்களாக மாற்றுவோம். இலங்கை முழுவதும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி இருக்கின்றோம், பாடசாலைகளுக்கு பேரூந்து வழங்கியிருக்கின்றோம் மற்றும் பல வேலைத்திட்டம் செய்திருக்கின்றோம்.
கடந்த மார்கழி மாதம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினோம். இவற்றை செய்வதற்கு அரசாங்கம் இல்லை அமைச்சுக்கள் இல்லை ஜனாதிபதி இல்லை ஆனால் நாங்கள் நாட்டு மக்களுக்கான சேவையை செய்து வருகின்றோம்.
பாடசாலை மாணவர்கள் மத்தியிலே அதிநவீன கருவிகளை கொண்டு வந்து கல்வியை மேம்படுத்த வேண்டும் அதன் மூலமாக இந்த பிரதேசமானது கல்வி சார்ந்த பிரதேசமாக மாறுவதற்கு முயற்சி செய்யலாம்.
என்னுடைய ஆட்சியை நிச்சயமாக மிகக் குறைந்த காலத்தில் மலரும் அந்த சந்தர்பத்திலே இந்த பகுதியில் உள்ள வைத்தியசாலையை முழுவதுமாக ஒரு புதிய வைத்தியசாலையாக இந்த பிரதேச மக்களுக்காக பெற்று தருவேன் என கூறுகின்றேன்
இந்த பகுதியிலே அதிகமான விவசாயிகள் காணப்படுகின்றார்கள், விவசாயிகள் தங்களுடைய பிரச்சனைகளை யாரிடம் சென்று கூறுவது என்று சொல்ல முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த மொட்டு கோட்டபாயவின் அரசாங்கம் இந்த நாட்டை அழிப்பதற்கு முன்னதாக முதலாவது விவசாயிகளைத்தான் அழித்தார்கள் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பசளைகளை இல்லாது செய்தார்கள், களைநாசிகளை இல்லாமல் ஆக்கினார்கள் எனவே இந்த விவசாயிகளினுடைய அடிமடியிலே கைவைத்து அவர்களை முற்று முழுவதுமாக அழித்து விட்டார்கள்.
அந்த விவசாயிகள் அங்கலாய்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் அவர்கள் செலவழித்த செலவைவிட குறைந்த விளைச்சலே கிடைத்துள்ளது.
விவசாயிகள் தொடர்பாக எங்களுக்கு பாரிய கரிசனை இருக்கின்றது அதாவது குறைந்த செலவில் அதிக விளைச்சலை பெறுவதற்கான திட்டத்தை செய்ய இருக்கின்றோம்.” என தெரிவித்தார்.