மக்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 8000 உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமென எதிர்கட்சி எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதன் காரணமாக நாடு மீண்டும் பொருளாதார பாதாளத்தில் விழுவதுடன் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் வாகனங்களை பெற்றுக்கொள்ள எடுத்த கடனக்களையும் வங்கிக் கடனை செலுத்த முடியாதவர்களும் கூட கடினமான காலத்தை சந்திக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
சுமார் 20 பில்லியன்கள் தேர்தலுக்காக மட்டுமே செலவிடப்படும் என்பதோடு தெரிவு செய்யப்பட்ட 8000 உறுப்பினர்களுக்கு அதன் பின்னர் மாதாந்தம் சம்பளங்களை வழங்க வேண்டும் என்றார்.
இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், பொருளாதார நெருக்கடிக்கு மீண்டும் முகங்கொடுக்க முடியாது என்றும் வஜிர அபேவிவர்தன தெரிவித்தார்.