சீனாவில் உள்ள தரப்புக்கள் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து பல்வேறு மணப்பெண் கடத்தல் மோசடிகளை நடத்துகின்றனர் என்று புலனாய்வு இதழியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் மனிதக் கடத்தல் நடந்தாலும், இந்த விடயத்தில் சீனாவின் காரணிகளும் திரைமறையில் உள்ளன.
சீனாவின் ‘ஒரு குழந்தை கொள்கை’ மற்றும் கருக்கலைப்பு ஆகியவை நாட்டின் பாலின விகிதத்தை பாதித்துள்ளன. இதனால் சீனாவில் மணப்பெண்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், சீனாவைப் பொறுத்தவரையில், தனிப்பட்ட பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கான பல கண்டிப்பான வரையறைகளை பின்பற்றுகின்றது. இதன் காரணமாகவே வேறு நாடுகளில் இருந்து மணப்பெண்களை சீனாவுக்கு அழைக்கும் நிலைமைகள் உருவெடுத்துள்ளன.
பொருளாதார மேம்பாடு மேலும் சீனப் பெண்களை வேலையில் சேர வழிவகுத்தது.
தொழிலாளர் தொகுப்பில் உள்ள அதிகமான பெண்கள், அவர்கள் பெருகிய முறையில் தங்கள் உரிமைகள் மற்றும் நிதி சுதந்திரத்தை வலியுறுத்துகின்றனர்,
சீனாவில் விவாகரத்து பெற்ற ஆண்கள் அதிகமாக இருப்பதற்கு பெண்கள் திருமண பந்தத்தினை விட்டு வெளியேறுவதே காரணமாக உள்ளது. இதனால், ஆண்கள் தமக்கான துணையைத் தேடுவதற்கு தரகர்களை அதிகம் நாடுவதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனாவில் விபச்சார வணிகம் அதிகரித்துள்ளதன் காரணத்தினாலும், பெண்கள் அதிகமாக கடத்தப்படுவதாக பதிவுகள் உள்ளன.
குறிப்பாக, பீஜிங், ஷென்சென் மற்றும் டொங்குவான் ஆகியவை பகுhதிகள் விபச்சார மையங்களாக மாறிவிட்டன.
இந்த விடயம் பாதிக்கப்பட்டவர்களின் கூற்றுக்கள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சீனாவில் பாலின ஏற்றத்தாழ்வு வரதட்சணை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதால் வெளியூர் மணப்பெண்ணை பெறுவது இலகுவானதாக உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, கம்போடியா, மங்கோலியா, வியட்நாம், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கிராமப்புற பெண்கள் அதிகளவில் சீனாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள்.
புலனாய்வு இதழியல் அறிக்கையின்படி, மேற்படி நாடுகளில் உள்ள கிராமப்புறப் பெண்கள், வறுமையின் காரணமாக, பெரும்பாலும் சீனாவிற்குக் கடத்தும் தரகர்களின் ஏகபோகத்திற்குப் பலியாகின்றனர்’ என்று புலனாய்வுப் பத்திரிகை அறிக்கை கூறுகிறது.
சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைகள் என்று விளம்பரம் செய்யும் தரகர்களால் பெண்களும் அவர்களது குடும்பங்களும் சீனாவிற்கு ஈர்க்கப்படுகின்றனர் என்றம் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
காத்மாண்டுவின் மனித கடத்தல் விசாரணைப் பணியகமான கூற்றுப்படி, நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் சீனப் பிரஜைகளால் ஏமாற்றப்பட்டு, அதிக சம்பளம் வழங்குவதாகக் கூறி சட்டவிரோதமாக லாவோஸுக்கு அனுப்பப்பட்டனர்.
முன்னதாக, இரண்டு சீன பிரஜைகள் 10 நேபாள இளைஞர்களை ஏமாற்றி விற்றுள்ளனர். நேபாள இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.