சீன மக்கள் கொரோனாவின் அதிகரிப்பால் வெளிநாடுகளால் விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதால், அந்நாடு பதிலடியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன்பிரகாரம், சீனா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாட்டு பயணிகள் விசா வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜப்பான், தென்கொரியா சீனவுக்கான பயணத்தடைகளை அறிவித்துள்ள நிலையிலேயே சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, ‘எங்களுடை நாட்டுக்குள் பிரவேசிப்பது குறித்து நாங்கள் நடவடிக்கைகளைச் செயற்படுத்துகிறோம்.
சர்வதேச மக்களின் பயணங்கள் நிறுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தவிர வேறு காரணங்களுக்காக விசா வழங்குவதை சீனா கட்டுப்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது’ என்றார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்குப் பிறகு பல நாடுகளின் கட்டுப்பாடுகளை சீனப் பயணிகள் எதிர்கொள்வது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்,
‘வருந்தத்தக்க வகையில், ஒரு சில நாடுகள், அறிவியல், உண்மை நிலைமையை புறக்கணித்து, சீனாவை குறிவைத்து பாரபட்சமான நுழைவு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளன.
சீனா இதை உறுதியாக நிராகரிக்கிறது. அதற்காக, பரஸ்பர நடவடிக்கைகளை எடுக்கும்’ என்றார்.
இதேநேரம், ஜேர்மன், பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகள் சமீபத்தில் சீனாவுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை ஊக்கப்படுத்தவில்லை என்று அறிவித்துள்ளன.
சீன அரசாங்கம் கடந்த மாதம், திடீரென அதன் பூச்சிய கொரோனா கொள்கையை நீக்குவதாக அறிவித்தது. இருப்பினும், சில ஊடக அறிக்கைகளின்படி, சீனா தனது முழு மக்களையும் முடக்குவதற்கு முயற்சிக்கிறது.
இதனால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அடைய முடியும் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது.
எவ்வாறாயினும், சீனாவில் நிலைமை குழப்பமானதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா அலை பீஜிங், ஷாங்காய், குவாங்சோ, வுஹான், சோங்கிங் மற்றும் பிற நகர்ப்புறங்களில் பாரியளவில் பரவியுள்ளமையால் வைத்தியசாலைகளும் நிரம்பி வழிகின்றமை குறிப்பிடத்தக்கது.