தென்மேல் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் கிழக்கு கரையூடாக நாட்டிற்குள் பிரவேசித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளிலில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தென்மேல் வங்காள விரிகுடாவை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.