வவுனியாவில் நேற்றையதினம் பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை 5 மணிக்கு ஆரம்பித்த காற்றுடன் கூடிய கனமழை இரவு 10 மணிவரையும் தொடர்ச்சியாக கொட்டித்தீர்த்தது.
இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், சில வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
அத்துடன் பல பகுதிகளிலும் உள்ள வியாபாரநிலையங்கள் மற்றும் குடியிருப்புகுளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன், அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல குளங்கள் வான் பாய்ந்து வருவதுடன் அறுவடையின் பின்னர் உலர் தற்காக போடப்பட்ட நெல்லும் மழையில் நனைந்துள்ளது.
வவுனியாவில் ஒரு சில நாட்களாக குளிருடன் கூடிய காலநிலை நிலவியநிலையில் இன்றையதினம் கடும் மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.