உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார்.
வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பதிலளிப்பதற்கான வழிகள் எங்களிடம் உள்ளன’ என கூறினார்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புடினின் கருத்துகளை விபரிக்க மறுத்துவிட்டார். ஆனால், ஊடகவியலாளர்களிடம், ‘கூட்டு மேற்கு நாடுகளால் புதிய ஆயுதங்கள் வழங்கப்படுவதால், பதிலளிப்பதற்கான அதன் திறனை ரஷ்யா அதிகமாகப் பயன்படுத்தும்’ என்று கூறினார்.