இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்பில் நடைபெற்றது.
இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை மற்றும் தேசிய கெடட் படையணிகளின் அணிவகுப்பு இடம்பெற்றது.
இந்த அணிவகுப்பில் முப்படைகளின் 390 கவச வாகனங்கள் உள்ளடங்கியதுடன், 21 ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் 29 அங்கவீனமுற்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வான்வழிப் போர் விமானங்கள் மற்றும் காலி முகத்துவாரத்திலிருந்து கடற்படைக் கப்பல்களும் இந்த நிகழ்வில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.