இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 3 (1) ஆவது பிரிவின்படி, திறைசேரியின் செயலாளரினால் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கூறிய சட்டத்தின் 6 (4) பிரிவின்படி, 2024 ஜூலை 16 ஆம் திகதி வரை நாணயக்கார குறித்த பதவியை வகிக்க முடியும்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான, பிரதித் தலைவர் உதேனி விக்ரமசிங்க மற்றும் மொஹான் சமரநாயக்க ஆகியோர், கடந்த 3 ஆம் திகதி தமது பதவி விலகல் கடிதங்களை வழங்கினர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை விட்டு விலகிய அதேவேளை, மின்சாரத் துறை ஒழுங்குமுறை அதிகாரியின் பணி முறை விரும்பத்தகாததாகவும், சகிக்க முடியாததாகவும் மாறியுள்ளதாக தெரிவத்து விலகியிருந்தார்.