உபாதையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், தான் இப்போதைக்கு டென்னிஸ் விளையாட மாட்டேன் என கூறியுள்ளார்.
அவரது யூ-டியூப் சேனலில் வெளியிட்ட ஒரு காணொயில் இந்த விடயத்தை தனது இரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.
சம்பியன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸின் சகோதரியும், 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான வீனஸ் வில்லியம்ஸ், கடந்த மாதம் நடந்த அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், வைல்ட் கார்ட் வாய்ப்பை பெற்று விளையாடியபோதிலும் அதற்கு முன் ஆக்லாந்து போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட்ட போது காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்தநிலையில், 42 வயதான வீனஸ் வில்லியம்ஸ், இப்போதைக்கு தான் டென்னிஸ் விளையாட மாட்டேன் என கூறியுள்ளார்.
5 முறை விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரிலும், 2 முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்றுள்ள வீனஸ் வில்லியம்ஸ் தற்போது, மகளிர் ஒற்றையர் பிரிவு சர்வதேச தரவரிசையில் 664ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.