எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பொதுஜன பெரமுன தரப்பினர் படுதோல்வி அடைவார்கள் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்ப நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை தீர்மானிக்க முடியாது என்றும் அரசியலமைப்பின் பிரகாரம் அனைத்தும் இடம்பெறும் என்றும் கூரியுள்ளார்.
தேர்தல் காலத்திற்கு காலம் நடத்தப்பட வேண்டும் என்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு சகல அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அரச நிறுவனங்கள் ஊடாக தேர்தலுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுவதாகவும் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.