அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் மூன்று பேரை சுட்டுக் கொன்றுவிட்டு மேலும் ஐந்து பேரைக் காயப்படுத்தி விட்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு லான்சிங் வளாகத்தில் உள்ள பெர்கி ஹால் என்ற கல்விக் கட்டடம் மற்றும் அருகிலுள்ள மாணவர் சங்க வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.
கறுப்பினத்தவர் என வர்ணிக்கப்படும் துப்பாக்கிதாரி, தப்பியோடிய பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
டெட்ராய்டில் இருந்து வடமேற்கே 145 கிமீ (90 மைல்) தொலைவில் அமைந்துள்ள சுமார் 50,000 மாணவர்களுக்கு சேவை செய்யும் வளாகத்தில், இச்சம்பவத்தை தொடர்ந்து, மாணவர்கள் மணிக்கணக்கில் தங்குவதற்கு உத்தரவிடப்பட்டனர்.
காயமடைந்தவர்களின் நிலைமைகள் உடனடியாகத் தெரியவில்லை மற்றும் துப்பாக்கிதாரி எந்த வகையான துப்பாக்கியைத் தாக்குதலில் பயன்படுத்தினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கான நோக்கம் உறுதியாக தெரியாத நிலையில், இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கி வன்முறைக் காப்பக கண்காணிப்பாளரின் கூற்றுப்படி,2021இல் பதிவாகிய 690ஐ விட 2022இல் 648பேர் என்ற சற்றே குறைவான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.