தேர்தலுக்கு இடையூறு விளைவிக்க முயற்சித்தமைக்காக திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சக அதிகாரி ஆகியோர் , சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அமைச்சினால் வெளியிடப்படும் எந்தவொரு சுற்றறிக்கைக்கும் மேலான நாட்டின் அதியுயர் சட்டம் ,அரசியலமைப்பு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே நாடாளுமன்றம், அமைச்சரவை, அமைச்சுச்க்களின் செயலாளர்கள் அல்லது அரச நிறுவனங்களின் தலைவர்கள் அரசியலமைப்பை மீற முடியாது என்றும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் ஏற்கனவே உள்ளுராட்சித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நிதியை நிறுத்தி வைக்க திறைசேரி க்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி இல்லை என்றால், சுதந்திர தின நிகழ்விற்கு எதிர்வரும் பெரஹெரவிற்கும் திறைசேரி எவ்வாறு நிதி வழங்கியது என்றும் எஸ்.எம். மரிக்கார் கேள்வியெழுப்பியுள்ளார்.