அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டார்.
இதனை கட்சியின் முக்கியஸ்தரான மாரிமுத்து கணபதிப்பிள்ளை மற்றும் திலகநாதன் கிந்துஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஷ் மற்றும் காண்டீபன் உட்பட கட்சியின் முக்கிய பிரதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.