புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாட தொழிற்சங்க ஒன்றியத்தினரை சந்திக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் வரி அறவிடும் சட்டத்திற்கு எதிராக 40 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இணைந்து கறுப்பு வாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த செய்தி வந்துள்ளது.
தங்களின் கோரிக்கைக்கு அமையவே ஜனாதிபதி நாளை (சனிக்கிழமை) கலந்துரையாடலில் ஈடுபட இணக்கம் தெரிவித்ததாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் வெற்றியளிக்காத பட்சத்தில், எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னரான காலப்பகுதி நாட்டிற்கு மிக தீர்மானமிகு காலப்பகுதியாக மாறக்கூடும் என அவர் எச்சரித்தார்.
அதேவேளை, முதலாம் திகதிக்கு பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று கூடவுள்ளது.