யூரோவிஷன் பாடல் போட்டிக்கு பிரித்தானிய அரசாங்கத்திடடமிருந்து 10 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் விசாக்கள் போன்ற செயற்பாட்டுச் செலவுகளுக்காகவும், இந்த நிகழ்வு உக்ரைனிய கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்தவும் இது செலவிடப்படும்.
லிவர்பூலின் உள்ளூர் அரசாங்கம் ஏற்கனவே 4 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி அளித்துள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் உக்ரைனியர்களுக்கும் பாடல் போட்டிக்கான சுமார் 3,000 டிக்கெட்டுகள் கிடைக்கும்.
மே மாதம் லிவர்பூலில் நடைபெறும் யூரோவிஷன் பாடல் போட்டி, உக்ரைனின் சார்பாக அதன் எம்.அண்ட்.எம். வங்கி அரங்கில் நிகழ்வை நடத்துகிறது,
அதன் கலுஷ் இசைக்குழு கடந்த 2022ஆம் ஆண்டு நிகழ்ச்சியை வென்றது. 25 ஆண்டுகளில் பிரித்தானியாவில் நடைபெறும் முதல் யூரோவிஷன் பாடல் போட்டி இதுவாகும்.