மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பதவியை தான் ஏற்கவில்லை என ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்கின்ற தீர்மானம் எதனையும் தமது கட்சி தீர்மானின்கவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களாக, காதர் மஸ்தானும் செல்வம் அடைக்கலநாதனும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மட்டுமே மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைமைப் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் எனவே ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.