கோப் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தனது முடிவை சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹர்ஷ டி சில்வாவின் பெயரை எதிர்கட்சியின் பிரதம கொறடா முன்மொழிந்த போதும் ஆளும்கட்சியினரால் மயந்த திஸாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.