பிலிப்பைன்ஸ் கடலோரக்காவல்படை மீது சீனாவின் கடலோரக் காவல்படையின் கப்பலானது, ‘இராணுவ தர’ லேசர் கதிர்களைப் பயன்படுத்தி சில பணியாளர்கள் மீதுசுட்டி, அவர்களைத் கண்மூடித்தனமாகச் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது,
சீனாவில் நான்ஷா தீவுகள் என அழைக்கப்படும் ஸ்ப்ராட்லி தீவுகளுக்கு மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் கடற்படையின் சுழற்சி கண்காணிப்பு மற்றும் விநியோகப் பணியை பிலிப்பைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் கப்பலில் இருந்து 137 மீற்றர் தொலைவில் காணப்பட்ட சீனக்கப்பல் ‘ஆபத்தான சூழ்ச்சிகளை மேற்கொண்டது’ என்று பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தனது அதிகாரப்பூர்வ வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சீனா தனது கப்பலில் இருந்து பச்சை நிறமான லேசர் கதிர்களை செலுத்தியமைக்கான சான்றாதாரங்களை சி.என்.என் வெளியிட்டுள்ளது.
‘எமக்கான தேசியத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரின் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் கண்டிப்பதாக பிலிப்பைன்ஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சீனாவின் வெளியுறவு அமைச்சு பிலிப்பைன்ஸ் கப்பல் சீன தரப்பின் அனுமதியின்றி ரெனாய் ரீஃப் கடலுக்குள் அத்துமீறி நுழைந்தது’ என்று குற்றம் சாட்டியுள்ளது.
‘சீனாவின் உள்நாட்டுச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி, சீன கடல்சார் காவல்துறைக் கப்பல் சீனாவின் இறையாண்மை மற்றும் கடல்சார் ஒழுங்கைப் பாதுகாத்தது’ என்று சீன செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார். எனினும் அதற்காக என்ன நடவடிக்கைகள் தமது தரப்பில் முன்னெடுக்கப்பட்டன என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.
கிட்டத்தட்ட 1.3 மில்லியன் சதுர மைல் தென் சீனக்கடல் மற்றும் அதிலுள்ள பெரும்பாலான தீவுகள் மீது சீனா மறுக்க முடியாத இறையாண்மை உரிமையைக் கோருகிறது.
பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உரிமை கோரப்படும் 100 சிறிய தீவுகள் மற்றும் திட்டுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டமும் இதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.