பூட்டான் தேசிய சபையின் சபாநாயகர் வாங்சுக் நம்கெல், மகாராஷ்டிர ஆளுர் பகத் சிங் கோஷ்யாரியை மும்பையில் சந்தித்து, சுற்றுலா உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது என ஆராய்ந்துள்ளார்.
பூட்டானைப் போலவே மகாராஷ்டிராவிலும் பௌத்த மதம் தொடர்பான பல தளங்கள் உள்ளன.
புகழ்பெற்ற அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளும் உள்ளன. ஆகவே சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இரு தரப்பினருக்கும் பெரு வாய்ப்புக்கள் உள்ளன.
பௌத்த சுற்றுலா தொடர்பான மற்றொரு விடயத்தில் இரு நாடுகளும் 50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் கொண்டாடும் நிலையில், தென் கொரியாவில் இருந்து 108 பௌத்த யாத்ரீகர்களுக்கு இந்தியா முதல் முறையாக சந்தர்ப்பத்தினை அளித்துள்ளது.
இந்த யாத்திரை இந்தியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா கூறுகையில், ‘இந்தியாவில் பௌத்த சுற்றுலாவை மேம்படுத்துவது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையாகும்.
தற்போதைய சூழ்நிலையில் பௌத்தம் பூட்டானில் ஒரு மதம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. பரோவில் உள்ள ரின்புங் ட்சோங், திம்புவில் உள்ள டேங்கோ மடாலயம் மற்றும் புனகாவில் உள்ள புனட்சாங்சு நதியைப் பார்வையிடுவதற்காக அங்கு அதிகளவானவர்கள் செல்கின்றனர்.
பூட்டானுக்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்கனவே உள்ள உறவுகள், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றுப்பயணத்தின் மூலம் பூட்டானுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புனிதமான இடங்களுக்குச் செல்வதன் மூலம் பௌத்த மதத்தைப் பற்றி மேலும் அறிய வாய்ப்பளிக்கிறது என்றார்.