நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் விவாதம் நடத்த விடுத்த கோரிக்கைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை.
சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினால் இந்த விவாதத்திற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே, அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விதிமுறைகள் குறித்து நாளை மறுதினம் விவாதம் நடத்தவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும் இன்றைய தினம் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குமுறைகள் குறித்து விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.