கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பொருளாதார நிலைத்தன்மையிலிருந்து மாற்றத்தை நோக்கி நகர்த்துவதே இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதன்மை நோக்கம் எனவும், எதிர்கால சந்ததியினர் கடந்த கால நெருக்கடிகளை எதிர்கொள்ளாத நாட்டைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைப்பதற்காக 147 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், கடினமான காலகட்டத்தில் பொருளாதார நிலைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பணவீக்கம் 8.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 528 பில்லியன் ரூபாய் இழப்புச் சுமையைத் தொடர்ந்து திறைசேரியால் தாங்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நட்டத்தில் இயங்கிய நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற முடிந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களை 8.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்க முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.













