2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாக வறுமையை ஒழித்தல், நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புதல், மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழித்தல், பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புதல் ஆகியவை அமைந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் தம்மீது வைத்துள்ள உயரிய நம்பிக்கையை நிறைவேற்றுவதுடன், அறவிடப்படும் ஒவ்வொரு வரி ரூபாய்க்கும் மக்களுக்கு உரிய மதிப்பை வழங்கி, உண்மையான மறுமலர்ச்சியை உருவாக்கி அறிவொளி பெற்ற இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதே இந்த வரவு செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.













