அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் தங்கியுள்ள இடத்திற்கு, ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் வருகை தந்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினருக்கும், அண்மையில் புத்த சாசனத்திலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, அது பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இதன்போது, போராட்டம் இடம்பெற்ற இடத்தில் கூடியிருந்த சிலர் தடிகளால் தாக்கியதில் ராஜாங்கனை சத்தாரதன தேரரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்த நிலையில், சிலர் தடிகளை ஏந்தி தாக்குதல் நடத்தும் காட்சிகள் அடங்கிய காணொளிகளும் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.













