மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், கொல்கத்தா-மும்பை ஏர் இந்தியா விமானத்தைக் கடத்துவதாக விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மிரட்டலால், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை (11) அன்று பாதுகாப்பு தொடர்பான பதற்றம் ஏற்பட்டது.
வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் செல்வதைத் தவிர்த்து, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவியுடன் இருப்பதற்காகவே தான் அந்தப் போலியான அச்சுறுத்தலை விடுத்ததாக அந்த நபர் புலனாய்வாளர்களிடம் தெரிவித்தார் என்று அதிகாரிகள் கூறினர்.
இந்தச் சம்பவம், புதன்கிழமை காலை மும்பைக்குப் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் AI 2772 (ஏர்பஸ் A320, பதிவு எண்: VT-TNH) தொடர்பானதாகும்.
காலை 10.37 மணியளவில், விமானத்தின் கழிவறையில் விமானப் பணியாளர்கள் ஒரு கையெழுத்துக் குறிப்பைக் கண்டெடுத்தனர்.
அதில், அந்த விமானம் காலை 11.10 மணிக்குக் கடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

















