மும்பை நோக்கிச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றின் கழிவறையில், அந்த விமானத்தைக் கடத்துவதாக மிரட்டல் விடுத்த குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பு, அது கொல்கத்தா விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டதாக ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த விமானம் இன்று (11) காலை 10.20 மணிக்கு புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.
காலை 11.10 மணிக்கு விமானம் கடத்தப்படும் என்று அந்த குறிப்பில் எச்சரிக்கப்பட்டிருந்ததாக, கொல்கத்தா விமான நிலைய பணிப்பாளர் விக்ரம் சிங் தெரிவித்ததை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தக் குறிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தில் ஏறியிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், பாதுகாப்புச் சோதனைகளுக்காக அந்த விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டது.
பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டன என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் முழுமையாகச் சோதிக்கப்பட்டு வருகிறது என்றும் சிங் தெரிவித்தார்.
விசாரணை குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் பாதுகாப்புச் சோதனைகளின் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.















