வட இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுவதும் பரவியுள்ள அடர்ந்த மூடுபனி மற்றும் புகைப் படலத்தை நாசா செயற்கைக்கோள் ஒன்று விண்வெளியிலிருந்து படம் பிடித்துள்ளது.
இப்பகுதியில் குளிர்காலம் தொடங்கவிருக்கும் சூழலில், மோசமடைந்து வரும் காற்று மாசு நெருக்கடியை இந்தப் புகைப்படம் தெளிவாகக் காட்டுகிறது.
இந்தப் புகைப்படம் இந்தோ-கங்கைச் சமவெளியில் அடர்ந்த சாம்பல் நிற மூடுபனி படர்ந்திருப்பதைக் காட்டுகிறது. இது பாகிஸ்தானிலிருந்து தொடங்கி, வட இந்தியா வழியாக நாட்டின் கிழக்குப்பகுதிகள் வரை பரவியுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மூடுபனி குறிப்பாகத் தெரிகிறது.
அதே சமயம், படத்தின் வடக்குப் பகுதியில் இமயமலைத் தொடர் தனித்துத் தென்படுகிறது.
பனி போர்த்திய மலைகளுக்கும், மாசு படிந்த சமவெளிகளுக்கும் இடையிலான வேறுபாடு, வளிமண்டல மூடுபனி எவ்வளவு பரந்த புவியியல் பரப்பளவில் படர்ந்திருக்கிறது என்பதையும் புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது.
இந்த வரைபடத்தில் பல சிவப்பு அடையாளங்கள் காணப்படுகின்றன; இவை கண்டறியப்பட்ட தீ மையங்களைக் குறிக்கின்றன.

இதில் வடமேற்கு விவசாய மண்டலப் பகுதிகளும் அடங்கும். இத்தகைய தீ மையங்கள், விவசாயக் கழிவுகளை எரிக்கும் வழக்கமான செயல்பாடுகளுடன் தொடர்புடையவை;
இது இப்பகுதி முழுவதும் பருவகால காற்று மாசுபாட்டிற்கு ஒரு காரணமாக அமைகிறது.













