2027ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடான பாதீட்டு திட்ட உரையை, நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை (12) பிற்பகல் 1.30க்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 2027 பாதீடு தொடர்பான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 26 நாட்கள் நடைபெறவுள்ளது.
இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 20ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு ஒவ்வொரு அமைச்சுக்களுக்குமான குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.
இறுதி நாளான டிசம்பர் 14ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
விவாதம் நடைபெறும் நாட்களில் மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை வரவுசெலவுத்திட்ட விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.














