• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பாண்டியாவுக்கு பஞ்சாப் அழைப்பு; அர்ஷ்தீப்புக்கு மும்பை வரவேற்பு!

பாண்டியாவுக்கு பஞ்சாப் அழைப்பு; அர்ஷ்தீப்புக்கு மும்பை வரவேற்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/11
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் சம்பந்தப்பட்ட, மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான பரிமாற்றம் புதன்கிழமை (11) அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, இரு ஐபிஎல் அணிகளும் தங்களது விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களைப் பரிமாறிக்கொண்டன.

மேலும் இதற்கான ஆவணங்கள் திங்கட்கிழமை அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) சமர்ப்பிக்கப்பட்டன.

TATA IPL 2027-க்கு முன்னதாக நடைபெறும் முக்கிய வீரர் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்குச் செல்கிறார்.

அதே சமயம், சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் (151), ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைகிறார் என்று ஐபிஎல் அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியா 18 கோடி இந்திய ரூபாய் ஊதியத்துடன் பஞ்சாப் (PBKS) அணியில் சேருவார் (இது அவரது தற்போதைய ஊதியமான 16.35 கோடி ரூபாயை விட அதிகம்).

அதே சமயம் அர்ஷ்தீப் தனது தற்போதைய ஊதியமான 18 கோடி இந்திய ரூபாயுடன் மும்பை (MI) அணியில் சேருவார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக ஐபிஎல் பரிமாற்றத்தில் (trade) பாண்டியா ஈடுபட்டுள்ளார். 

2024 சீசனுக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து அவரை முழுமையாகப் பணப் பரிவர்த்தனை மூலம் மீண்டும் அழைத்து வந்தது. 

மேலும், அந்த அணிக்காக ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிற்குப் பதிலாக, பாண்டியாவை தலைவராக நியமித்தது.

இந்தத் திரும்ப வருகையின் நோக்கம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீண்ட கால அடிப்படையில் ஒரு தலைவரையும், போட்டியை வென்று கொடுக்கக்கூடிய சகலதுறை செயல் திறனையும் பெற்றுத் தருவதாகும். 

அவர் பொறுப்பில் இருந்த மூன்று சீசன்களில், 2024-ல் மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.

2025-ல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது; ஆனால் 2026-ல் மீண்டும் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஒட்டுமொத்தமாக, 2024 முதல் அவரது தலமையின் கீழ் மும்பை அணி ஆடிய 39 போட்டிகளில் 15 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 24 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 

மும்பை அணிக்கான அவரது வெற்றி-தோல்வி விகிதம் (0.625), குறைந்தது 30 ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணியை வழிநடத்திய எந்தவொரு தலைவரை விட மிகவும் மோசமானதாகும். 

இது குஜராத் அணியுடனான அவரது சாதனையுடன் முற்றிலும் மாறுபட்டது — 31 போட்டிகளில் 22 வெற்றிகள் மற்றும் ஒன்பது தோல்விகள். 

அந்த 2.444 விகிதம், 28 போட்டிகளில் 2.500 என்ற விகிதத்தைக் கொண்டுள்ள ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரஜத் பாடிதாருக்குப் பிறகு, ஐபிஎல் வரலாற்றில் சிறந்த விகிதங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

பஞ்சாப் அணியில், ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே தலைமைப் பொறுப்பை உறுதியாக வகித்து வருவதால், பாண்டியா அந்தப் பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்பு குறைவு. 

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக ஐயர் அணியை வழிநடத்தி வருகிறார்; இதன் விளைவாகவே அவருக்கு டி20 சர்வதேச அணியின் தலைமைப் பொறுப்பும், ஒருநாள் சர்வதேச அணியின் துணை தலைவர் பொறுப்பும் கிடைத்தன. 

இருப்பினும், இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கிண்ணத்தை வெல்லாத பஞ்சாப் அணிக்கு, பாண்டியாவின் அனுபவம் பெரும் பலமாக அமையும். 

அந்த அணி கடந்த 19 ஆண்டுகளில் 2014 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது.

மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை, 2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து புதிய பந்தை வீசக்கூடிய ஒரு தரமான பந்துவீச்சாளரின் தேவை தெளிவாகத் தெரிந்தது. 

டிரென்ட் போல்ட் அந்த சீசனில் எதிர்பார்த்தபடி சிறப்பாகச் செயல்படவில்லை, மேலும் அவர் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 

ஒருவேளை மும்பை அணி போல்ட்டை விடுவிப்பதாக முடிவு செய்தால், அர்ஷ்தீப் சிங் அவருக்குச் சிறந்த மாற்றாக இருப்பார். 

பும்ராவைப் போலவே, அர்ஷ்தீப்பும் ஆட்டத்தின் அனைத்து நிலைகளிலும் சிறப்பாகப் பந்துவீசக்கூடிய திறன் கொண்டவர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியைத் தவிர்த்து, வேறு ஒரு ஐபிஎல் அணியில் அர்ஷ்தீப் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். 

2019-ல் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான இந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர், இதுவரை 96 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்; அவரது எகானமி ரேட் 9.18 ஆக உள்ளது.

Hardik Pandya and Arshdeep Singh

Related

Tags: Hardik PandyaIPLபஞ்சாப் கிங்ஸ்மும்பை இந்தியன்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Related Posts

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
இலங்கை

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2026-11-11
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை தீர்மானங்கள் முழு விபரம்!

2026-11-10
சுவசெரிய சேவைக்கு 100 புதிய அம்பியூலன்ஸ்கள்!
இலங்கை

சுவசெரிய சேவைக்கு 100 புதிய அம்பியூலன்ஸ்கள்!

2026-11-10
அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!
இலங்கை

அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்!

2026-11-10
434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!
பிரதான செய்திகள்

434 ஓட்டங்களுடன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

2026-11-10
தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!
இலங்கை

தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

2026-11-10

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04

பாண்டியாவுக்கு பஞ்சாப் அழைப்பு; அர்ஷ்தீப்புக்கு மும்பை வரவேற்பு!

0
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

0
கொழும்பில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வடிகால் அமைப்புகளைப் புதுப்பிக்கத் திட்டம்!

கொழும்பில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வடிகால் அமைப்புகளைப் புதுப்பிக்கத் திட்டம்!

0
கொழும்பு பங்குச் சந்தையின் ASPI சுட்டெண் மீண்டும் 22,000 புள்ளிகளைக் கடந்தது!

கொழும்பு பங்குச் சந்தையின் ASPI சுட்டெண் மீண்டும் 22,000 புள்ளிகளைக் கடந்தது!

0
உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: