அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கோட்டை பகுதியில் இன்று(புதன்கிழமை) மதியம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், கல்வி, துறைமுகம், மின்சாரம், வங்கி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க,
“அனைத்து துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் திரள்வார்கள். இது மற்றுமொரு சமிக்ஞையே.
இந்த துறைகள் அனைத்தும் தங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டால், இந்த நாடு செயலிழந்துவிடும் என்ற உண்மையை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.