இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் உதவி குறித்து கண்காணித்து வருவதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.
பெல்ஜியம் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு இடையில் லக்ஸம்பேர்க்கில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப்பெற்றவுடன் இலங்கையில் பசுமை செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியுதவிகளை வழங்குவது குறித்து தாம் பரிசீலனை செய்வதாகவும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.