நாட்டில் பற்றாக்குறையாக உள்ள 37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக் கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டுடன் இணைந்து இந்த கலந்துரையாடல் ஜெனீவாவில் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.