மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சென்சூரியனில் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 342 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெய்டன் மார்க்ரம் 115 ஓட்டங்களையும் எல்கர் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் 5 விக்கெட்டுகளையும் ரோச், கெய்ல் மேயர்ஸ், கெப்ரியல் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக, களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரெய்பர் 62 ஓட்டங்களையும் பிளெக்வுட் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில், நோக்கியா 5 விக்கெட்டுகளையும் ரபாடா மற்றும் கோட்ஸே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மார்க்கோ ஜென்ஸன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 130 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதற்கமைய தென்னாபிரிக்கா அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 247 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெய்டன் மார்க்ரம் 47 ஓட்டங்களையும் கோட்ஸே 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரோச் 5 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கெப்ரியல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 247 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 159 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிளெக்வுட் 79 ஓட்டங்களையும் ஜேஸன் ஹோல்டர் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், ரபாடா 6 விக்கெட்டுகளையும் ஜென்ஸன் 2 விக்கெட்டுகளையும் நோக்கியா மற்றும் கோட்ஸே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்கா அணி சார்பில், முதல் இன்னிங்ஸில் 115 ஓட்டங்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹெய்டன் மார்க்ரம் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 8ஆம் திகதி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.