தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் நியமனங்களை இம்மாத இறுதிக்குள் இறுதி செய்வதற்கு அரசியலமைப்பு பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான விண்ணப்பங்களை கோர அரசியலமைப்பு பேரவை அண்மையில் நடவடிக்கை எடுத்தது.
இந்தநிலையில் தற்போது கிடைத்துள்ள விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய தேர்தல் ஆணைக்குழு, தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொது சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, தேசிய தணிக்கை சேவைகள் ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கான நியமனம் இம்மாத இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கான நியமனம் இம்மாத இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என கூறப்படுகின்றது.