கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
தெர்பாராவல் சுமார் 4 மணித்தியாலயங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீயினால் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.