பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியில், லிவர்பூல் அணி 7-0 என்ற கோல்கள் கணக்கில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.
என்பீல்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான இப்போட்டியில், லிவர்பூல் அணி 7-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.
இதில் லிவர்பூல் அணி சார்பில், கோடி காக்போ 43ஆவது மற்றும் 50ஆவது நிமிடங்களிலும், டார்வின் நுனேஸ் 47ஆவது, 75ஆவது நிமிடங்களிலும், மொஹமட் சாலா 66ஆவது, 83ஆவது நிமிடங்களிலும் ரொபர்டோ பெர்மினோ 88ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
1989ஆம் ஆண்டு கிறிஸ்டல் பெலஸ் அணிக்காக 9-0 என்ற கோல்கள் அடித்ததே லிவர்பூல் அணியின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டாலும், மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான மிகப்பெரிய வெற்றியாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு லீக் கிண்ணத்தை வென்ற யுனைடெட் அணிக்கு இது அதிர்ச்சி தோல்வியாக அமைந்துள்ளது.
மன்செஸ்டர் யுனைடெட், 1926இல் பிளாக்பர்ன் ரோவர்ஸிடமும், 1930இல் ஆஸ்டன் வில்லாவிடமும் மற்றும் 1931இல் வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸிடமும் இதே கோல்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஜூன் 2017இல் ரோமாவில் இருந்து லிவர்பூலுக்கு சாலா வந்த முதல் நாளிலிருந்து அவர் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கமாக இது பார்க்கப்படுகின்றது.