340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் அதன் அனைத்து அதிகாரமும் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு மாறியுள்ளன.
2018 தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக் காலம் கடந்த வருடத்துடன் நிறைவடைந்த போதிலும், மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், 2019 ஒக்டோபர் மாதம் தெரிவு செய்யப்பட்ட எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் பதவிக் காலம் இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது.
காலாவதியான 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பாக சட்டமா அதிபரின் கருத்தை கோருவதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானத்தை இன்று பெற்றுக் கொள்வதாக எதிர்பார்த்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.