சீனாவில் பூச்சிய கொரோனா கொள்கைக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடைபெற்று மூன்று மாதங்களுக்கும் மேலாகியும், அவர்களை இலக்கு வைத்த கைதுகள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் பூச்சிய கொரோனா கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற எதிர்ப்பாளர்களில் பலர் இப்போது உயிருடன் இல்லை என்பது துரதிஷ்டவசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடுகளின்படி, பேரணிகளில் ஈடுபட்டவர்களை இலக்கு வைத்து 100க்கும் மேற்பட்ட கைதுகள் நடந்துள்ளன.
மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டங்களில் பங்கேற்றதற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வெற்று வெள்ளைத் தாள்களை ஏந்தி கடுமையான கொரோனா கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் தலைவர் ஷி ஜின்பிங்கும் தமது தெளிவான செய்தியை சொல்லும் முகமாக அவர்கள் இந்தப் போராட்டத்தினை நடத்தினர்.
இதனையடுத்து, புத்தாண்டில் சீனப் பொலிஸார் பல கைதுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
எதிர்ப்பாளர்களில் பலர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் படித்தவர்கள் என்பதால், சர்வதேச உரிமை அமைப்புகளும் வெளிநாட்டு நிறுவனங்களும் அவர்களை விடுதலை செய்யக் கோரி வருகின்றன.
பீஜிங் மற்றும் ஷாங்காய், குவாங்சோ மற்றும் நான்ஜிங் உள்ளிட்ட பிற நகரங்களில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் பட்டியல்கள் ஆர்வலர் குழுக்களால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
பீஜிங்கில் உள்ள பெரும்பாலான கைதிகள் முறைசாரா நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்களில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இசைக்கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிதித்துறையில் பணிபுரியும் நபர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவில் இளைஞர்கள் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காக தைரியமாக பேசுவதற்கு பயங்கரமான விலையை கொடுக்கிறார்கள்.
கைதிகளின் நண்பர்கள் மற்றும் சட்டத்தரணிகளை அதிகாரிகள் அச்சுறுத்தப்படுகின்றார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது.