சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி திவாலாகிவிட்ட நாட்டிற்கு கடன் வாங்கும் செலவைக் குறைக்க உதவும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய இந்த நிதியுதவியை பயன்படுத்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை ப்ளூம்பேர்க்கிற்கு வழங்கிய நேர்காணலிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிதியுதவி உள்நாட்டு சந்தைகளில் இருந்து அரசாங்கம் கடன் வாங்கும் தேவையை எளிதாக்கும் என்றும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது வட்டி விகிதங்களைக் குறைக்கவும், உள்நாட்டு வட்டி விகிதங்கள் மீதான அழுத்தத்தை மேலும் குறைக்கவும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் முதல் தவணையாக கிடைக்கும் 333 மில்லியன் டொலர் நிதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அந்நிய செலாவணி இருப்புக்களை மீண்டும் உருவாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.