நாட்டில் லிஸ்டீரியா (Listeria – Listeriosis) தொற்றுநோய் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண் ஒருவரே நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக வெளியான செய்தி தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் இறப்புக்கான காரணம் லிஸ்டீரியா (Listeria – Listeriosis) நோய் என உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதேவேளை, காய்ச்சல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் லிஸ்டீரியா பக்டீரியா, அசுத்தமான உணவின் மூலம் உடலுக்குள் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.