சரியான ஆய்வு மற்றும் முறையான நாடாளுமன்ற விவாதம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏதேனும் பிரச்சினைகள் இருப்பினுஜம் ஐ.எம்.எப். உடன் விவாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
முறையான ஆய்வு மற்றும் ஆய்வு இல்லாமல் எதையும் அங்கீகரிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்தோடு அறிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி முன்வைக்கும் கருத்துக்களை முழுமையாக செவிமடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த அறிக்கை குறித்து ஏப்ரல் மூன்றாம் வாரத்திற்குள் நாடாளுமன்றம் தனக்கு பதிலளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.