சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதல் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று இலங்கை பெற்றுக்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய அவர், இந்த நிதியை நாட்டின் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக திறைசேரிக்கு மாற்ற சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16 முறை, சர்வதேச நாணய நிதியம் அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை என்றாலும் கூட, அரசாங்கத்தின் தலையீடு காரணமாக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.