வாரணாசியில் ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைத்தார்.
முன்னதாக உலக காச நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்திய பிரதமர், காசநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதன்பிறகு சம்பூர்ணானந்த சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் 1780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், புதிய திட்டங்களை ஆரம்பித்தும் வைத்தார்.
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியின் உள்கட்டமைப்புக்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.