தரை வழிப் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் ஜேர்மனியும் பிரித்தானியாவும் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.
உக்ரேனிய படைகளுக்கு சிறுத்தை டாங்கிகளைப் பயன்படுத்த பயிற்சியளிக்கப்பட்ட பின்னர் இவற்றை ஜேர்மன் வழங்கியுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட நவீன வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் அரசாங்கம் தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வருகின்றது.
நேட்டோ நாடுகளால் தயாரிக்கப்பட்ட சிறந்த போர் டாங்கிகளில் ஒன்றாகக் கருதப்படும் குறித்த டாங்கிகள் ஐரோப்பிய நாடுகளில் தற்போதும் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.